Vikram in Ponniyin Selvan | Manirathnam Movie Updates | Jayam Ravi | Chiyaan Vikram | Karthi | Ponniyin Selvan Updates | Manirathnam

Vikram in Ponniyin Selvan :

Vikram in Ponniyin Selvan : தமிழ் சினிமாவின் போக்கை மாற்றியமைத்த மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.

இவர் செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தனது கனவு படமான பொன்னியின் செல்வனை உருவாக்க தயாராகி வருகிறார்.

இதில் கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஷ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், சத்யராஜ் என இந்திய அளவில் இருந்து பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

மேலும் நயன்தாராவும் இப்படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபக்கம் இருக்க தற்போது அமலா பாலும் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

இவர் நயன்தாராவுக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறொரு வேடத்தில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

இது ஒருபக்கம் இருக்க இந்த படத்துக்காக தற்போதே விக்ரம் உடல் எடையை அதிகரிக்கும் பணியில் இறங்கிவிட்டாராம்.

மேலும் குதிரை ஏற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளையும் விக்ரம் மேற்கொள்ள தயாராகி வருகிறாராம். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.