மணிரத்தினம் இயக்கத்தில் மீண்டும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் விக்ரம். இவர் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்2 திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்து அசத்திய இவருக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே ஜோடியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ராவணன் திரைப்படத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்த இரண்டு படங்களிலும் இவர்களது ஜோடியின் கதாபாத்திரங்கள் ஒன்று சேராமல் போனது. இந்த நிலையில் தற்போது விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவை மீண்டும் ஜோடியாக வைத்து மணிரத்னம் ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்திற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வைரலாகி வருகிறது.