vijaytv chellamma serial latest update
vijaytv chellamma serial latest update

செல்லம்மா சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று செல்லம்மா. இந்த சீரியலில் ஹீரோவாக சித்தார்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அர்ணவ், இவருக்கு ஜோடியாக செல்லம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அன்ஷிதா.

சித்துவுக்கும் செல்லம்மாவிற்கும் திருமணம் முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் அவர்களை நெருங்க அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்று கதை நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாகவும் இறுதி கட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப் போவதால் சில சீரியல்கள் நேரம் மாற்றம் மற்றும் முடிவுக்கு கொண்டு வருவது வழக்கமானது. அந்த வகையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளது.

இது செல்லம்மா சீரியல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலில் ஹீரோயின் ஆக இருக்கும் செல்லம்மா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.