விஜயின் சம்பளம் மற்றும் புகைப்படத்தின் பட்ஜெட் குறித்து பேசி உள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் காப்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ் .சுரேஷ் ,கல்பாத்தி எஸ், கணேஷ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், சினேகா, VTV கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தை நான்காவது சிங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, இந்தப் படத்தின் பட்ஜெட் குறித்தும் விஜயின் சம்பளம் குறித்த உண்மையை கூறியுள்ளார்.
அதில், விஜய்க்கு 200 கோடி சம்பளம் உண்மைதான் எனவும்,தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, நார்த் இந்தியா, ஓவர்சீஸ் போன்ற அனைத்து இடங்களிலும் தளபதியின் மார்க்கெட் தாறுமாறாக ஏறியது தான் அவரின் சம்பள உயர்விற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும் கோட் படத்தின் பட்ஜெட் ஜி.எஸ்.டியுடன் சேர்த்து 400 கோடி வந்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.