விஜய்யின் அடுத்த 65,66,67 படங்களின் தயாரிப்பாளர்கள் யார்…யார் தெரியுமா?

Vijay‘s Next 3 Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஸ்ரீமன், பிரேம், மகேந்திரன், ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த படம் மட்டும் ரிலீஸாகட்டும் கொண்டாடுவீங்க.. – கர்ணன் படம் பற்றி பேசிய பிரபல நடிகர்!

அதன் பின்னர் விஜய் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை வெற்றி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் மகிழ்திருமேனி இயக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் தளபதி 67 படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் விஜய்யின் அடுத்த மூன்று படங்களில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இதை நீங்க எந்த படத்திற்காக மிகவும் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எங்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள்.