Vijay's Family

Vijay’s Family : மகனுக்கு சினிமா, மகளுக்கு விளையாட்டு என அவரவர் விருப்பப்படி ஜெயிக்க தன்னுடைய மகனையும் மகளையும் ஊக்குவித்து வருகிறார் தளபதி.

ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக தமிழ் சினிமாவின் ஜாம்புவானாக வலம் வரத் தொடங்கியுள்ளார் தளபதி விஜய். இவருக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சினிமாவில் சாதித்ததை தொடர்ந்து விரைவில் அரசியலிலும் குதித்து சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

விஜயை போலவே அவரது வாரிசுகளும் சாதிக்க துடிக்கின்றன. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் ஒரு இயக்குநராக நடிகனாக சாதிக்க வேண்டும் என அதற்கான செயல்பாடுகளில் மும்மராக இறங்கியுள்ளார்.

அதே போல் விஜயின் மகள் திவ்யா சாஷா பேட்மிட்டன் விளையாட்டின் மீது ஆதீத ஆர்வம் கொண்டு சாதித்து காட்ட வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

சமீபத்தில் கூட திவ்யாவின் பள்ளியில் நடந்த பேட்மிட்டன் விளையாட்டில் அவரும் அவரது குழுவும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.

இதனை அப்பள்ளி நிர்வாகமே முகநூல் பக்கத்தில் அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.