Vijayalakshmi Tried Commit Suicide
Vijayalakshmi Tried Commit Suicide

சீமான் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Vijayalakshmi Tried Commit Suicide : தமிழ் சினிமாவின் சூர்யா மற்றும் விஜய் நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப் படத்தில் நடித்து பிரபலமானவர் விஜயலட்சுமி.

மேலும் இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ளார்.

பெங்களூரில் இருந்து வந்த இவர் சீமான் தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அடிக்கடி வீடியோ வெளியிட்டு சீமான் குறித்து பேசி வந்தார். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியினர் தன்னை தகாத வார்த்தையில் பேசுவதாகவும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார். சீமானை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

மதுமிதா தற்கொலைக்கு முயன்றது உண்மை தானா? – அதற்கு ஆதாரம் இதுவா?

இந்த நிலையில் தற்போது விஜயலட்சுமி சென்னையில் தங்கியிருந்த வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு எடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விஜயலட்சுமியின் தற்கொலை முயற்சி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.