Vijayakarthikeyan About Valimai

வலிமை படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களை தெறிக்க விட வைத்துள்ளார் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன்.

Vijayakathikeyan Tweet About Valimai : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச் வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பாலிவுட் சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத்திடம் கூட்டணி அமைத்து நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடிக்க பல நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

வலிமை அப்டேட் கொடுத்த கலெக்டர்.. வேற லெவலில் தெறிக்கும் லைக்ஸ் - வைரலாகும் பதிவு.!!

இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் ஆகியும் படக்குழு எந்தவித தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது. இதனால் அஜீத் ரசிகர்கள் முதல்வர் முதல் அனைவரிடமும் வலிமை குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் இதுவும் வலிமை அப்டேட் தான் எனக்கு ஒரு தேர்தலுக்கு கூட்டணி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தல அஜித் பட தலைப்பை மையமாகக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் அஜித் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது. இதோ பாருங்க