Vijayakanth return Chennai
Vijayakanth return Chennai

Vijayakanth return Chennai – சென்னை: அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு நாளை மறுநாள் தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக பொதுச் செயலாளரான கேப்டன் விஜயகாந்த் குரல் வள பிரச்சினை மற்றும் தைராய்டு பிரச்சினைகளுக்காக அமெரிக்காவில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

அமெரிக்காவிலேயே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் திருமண நாளை கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் அவரது டுவிட்டர் பக்கத்தில் அவ்வபோது வெளியானது.

டிவிட்டரில் விஜயகாந்த் புகைப்படங்கள் வெளியானதால் அவர் நலமுடன் உள்ளார் என அவரது தொண்டர்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.

இந்நிலையில் மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் அதிமுக-பாஜக – தேமுதிக கூட்டணி அமையும் என தகவல் அங்கங்கு பரவி வருகிறது. இந்நிலையில் விஜயகாந்த் சென்னை திரும்பியவுடன் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜயகாந்த் நாளை மறுநாள்(16.02.19) அன்று காலை 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜயகாந்த் அவர்கள் உடல்நலமுடன் உள்ளார் என கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் வந்தவுடன் ஓரிரு நாளில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என தெரிகிறது.

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.