வெங்கட் சுபா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Vijayakant Condolences to Venkat Suba Death : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

வெங்கட் சுபா மறைவிற்கு கேப்டன் விஜயகாந்த் இரங்கல் - அவரைப் பற்றி என்ன சொல்லி இருக்கார் பாருங்க.

ஏற்கனவே கேவி ஆனந்த், எஸ் பி பாலசுப்ரமணியம், விவேக் என இறந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழ் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் நடித்து வந்த பன்முகத் திறமை கொண்ட வெங்கட் சுபா கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருடைய மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மறைந்த வெங்கட் சுபா அனைவரிடமும் அன்புடன் பழகக் கூடிய ஒரு இனிமையான மனிதர். மேலும், சினிமா உலகில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது

RipVenkatsubha என தெரிவித்துள்ளார்.