Vijay Vs Sivakarthikeyan

Vijay Vs Sivakarthikeyan : விஜய் படங்கள் என்றாலே இப்படி தான் இருக்கும்.. அதே போல் தான் தற்போது சிவகார்த்திகேயன் படங்களும் உள்ளன என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜ் காமராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள கனா படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாக உள்ளது. மேலும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும் போது அவரிடம் சிவகார்த்திகேயனின் தனித்தன்மையை பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர்.

அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சாரை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் நடிக்கும் போது ஹுமர் கலந்து நடிப்பார். அதே போல் தான் தற்போது சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என கூறியுள்ளார்.

தற்போது படம் பார்த்த சினிமா வட்டாரங்கள் படத்தை பற்றி பாசிட்டிவான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.