Vijay Vs Siva

Vijay Vs Siva : யார் ஹீரோ என்று விஜய்க்கும் சிவாவுக்கும் இடையே நடந்த யுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ஹீரோ. இந்த படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஹீரோயினியாக கல்யாணி ப்ரியதர்ஷன் அறிமுகமாக அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்த படத்திற்கு ஹரோ என தலைப்பு வைக்கப்பட்டது.

இந்த தலைப்பில் தான் பிரச்சனையே எழுந்தது. காரணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் படம் ஒன்றிற்கும் ஹீரோ என தலைப்பு வைத்துள்ளனர்.

பின்னர் இந்த பிரச்சனை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றுள்ளது. இறுதியில் ஹீரோ என்ற டைட்டிலை சிவகார்த்திகேயன் படத்திற்கு அளித்துள்ளனர்.

காரணம் சிவகார்த்திகேயனின் படக்குழு முறையான அனுமதி கடிதத்துடன் இந்த டைட்டிலை வாங்கியுள்ளனர். ஆனால் விஜய் தேவரகொண்டா படக்குழு இதை செய்யவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.