Vijay Vs Dhanush

Vijay Vs Dhanush : மெர்சல்க்கும் மாரி 2 படத்தின் பாடலுக்கும் தற்போது யூ ட்யூபில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஜெயிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ் சினிமாவின்முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை மட்டும் பார்க்கலாம் பாடலின் ஹிட்ஸ், லைக்ஸ் என அனைத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது ரசிகர்களின் பொழுதுபோக்காக மாறி விட்டது.

அந்த வகையில் யூ ட்யூபில் வெளியான பாடல்களில் தனுஷின் வொய் திஸ் கொலவெறி பாடல் அதிகமான பார்வையாளர்களை பெற்று முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதனையடுத்து தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்றிருந்த ஆளப்போறான் தமிழன் பாடல் 91 மில்லியன் பார்வையாளர்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் 83 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதனால் இந்த இரண்டு பாடல்களில் விரைவில் 100 மில்லியன் ஹிட்ஸை பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here