Vijay Vetrimaaran Movie Updates
Vijay Vetrimaaran Movie Updates

விஜய், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் உருவானது எப்போது என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Vijay Vetrimaaran Movie Updates : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்ததும் திரைக்கு வர தயாராக உள்ள இந்த படத்தையடுத்து விஜய் யாருடன் இணைவார் என்பது குறித்து கேள்வி இணையதளத்தில் இருந்து வருகிறது.

தளபதி விஜயின் வெற்றி மாறன், ஹரி, அருண்ராஜா காமராஜ், பா ரஞ்சித், பேரரசு என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளார்.

விஜய், வெற்றிமாறன் கூட்டணி உடனே இணைவதாக இருந்தது. ஆனால் வெற்றிமாறன் சூரியுடன் ஒரு படம், சூர்யாவுடன் வாடி வாசல் திரைப்படம் என கமிட் ஆகி விட்டதால் ஒரு வருடத்திற்கு அவர் வெளியே வர முடியாது.

நடிகர் முரளியின் தம்பி யார் தெரியுமா? அண்ணனின் உதவி இல்லாமல் சினிமாவில் இடம் பிடித்த வில்லன் தான்!

இதனால் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் விஜய். முருகதாஸ் படத்தை முடிப்பதற்குள் வெற்றிமாறன் இந்த இரண்டு படங்களையும் முடித்து விடுவார் என கூறப்படுகிறது.

அதன் பிறகு நிச்சயம் விஜய், வெற்றிமாறன் கூட்டணி உருவாகும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

தளபதி விஜய்யும் வெற்றி மாறனுடன் இணைவதற்காக தயாராக உள்ளார். வெற்றிமாறனும் விஜய் படத்திற்காக ஆவலுடன் வெயிட்டிங் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் பிறந்தநாளில் பிரபல பத்திரிகை ஒன்று நடத்திய ஓட்டெடுப்பில் விஜய்யின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க வேண்டும் என்று தான் பெரும்பாலான ஓட்டுகள் ( கிட்டத்தட்ட 60% ) கிடைத்துள்ளன.

ஆகையால் ரசிகர்கள் ஆசையை நிச்சயம் வெகு விரைவில் விஜய் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கலாம்.