விஜயின் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

விஜயின் வாரிசு… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வைரல்.!

வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, நேற்றோடு விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை அவர் முடித்து படத்துக்கு விடைபெற்றுள்ளார். மேலும் இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்று டிசம்பர் 9 ஆம் தேதியோடு மொத்த ஷூட்டிங்கும் முடிவடையும் என சொல்லப்படுகிறது.