விஜய் டிவி சீரியல் நடிகை சரண்யா துராடி புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Vijay Tv Saranya in BMW Car Price Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சரண்யா துராடி. இதனையடுத்து இவர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கி பின்னர் அதிலிருந்து விலகிக் கொண்டார்.

புதிய கார் வாங்கிய விஜய் டிவி சரண்யா.. வைரலாகும் புகைப்படம் - காருடைய விலையை கேட்டா மிரண்டு போயிடுவீங்க.!!

அதன் பின்னர் விஜய் டிவியில் வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் ஐம்பது எபிசோடுகள் கூட முடிவடையாத நிலையிலேயே இந்த சீரியல் நிறுத்தப்பட்டுவிட்டது.

இப்படியான நிலையில் சரண்யா புதிய பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

புதிய கார் வாங்கிய விஜய் டிவி சரண்யா.. வைரலாகும் புகைப்படம் - காருடைய விலையை கேட்டா மிரண்டு போயிடுவீங்க.!!

அதே சமயம் சரண்யா வாங்கியுள்ள காரின் விலை என்ன என கூகுளில் தேடி அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆமாம் சரண்யா வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ கார் விலை ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய். இந்த விலையைக் கேட்டு ரசிகர்கள் பலர் மிரண்டு போயுள்ளனர்.