தல அஜித்

இதுவரை தல அஜித் 59 படத்தில் நடித்தும் அஜித்தின் ஒரு படத்தைக்கூட பிரபல தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வாங்காதது வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக அறுபதாவது திரைப்படமாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதுவரை அஜித் நடிப்பில் மொத்தம் 59 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்தத் திரைப்படங்களில் வெற்றி, தோல்வி, சூப்பர் ஹிட் என அனைத்தையும் கடந்து ஸ்டார் தல அஜித்.

பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களின் சாட்டிலைட் உரிமை களை தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு வாங்குவது என்பது வழக்கமான ஒன்று.

இதுவரை 59 படத்தில் நடித்தும் அஜித்தின் ஒரு படத்தை கூட வாங்காத தொலைக்காட்சி நிறுவனம் - நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா??

ஆனால் அஜித் நடிப்பில் வெளியான 59 படங்களில் ஒரே ஒரு படத்தைக் கூட வாங்காமல் இருப்பது ஒரே ஒரு டிவி சேனல் தான். அது விஜய் டிவி மட்டும் தான்.

இந்த தகவல் இணையத்தில் வைரலாக அஜித் ரசிகர்கள் செம கடுப்போடு நீங்க என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் பெரும்பாலான படங்களை சன் டிவி தொலைக்காட்சியும் ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனல் மட்டுமே போட்டி போட்டு வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.