Vijay TV Rachitha Trolls
Vijay TV Rachitha Trolls

சரவணன் மீனாட்சி ரக்ஷிதா புடவை கட்டிய ஸ்டைலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Vijay TV Rachitha Trolls : தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்ஷிதா. இந்த சீரியல் பல சீசன்களை கடந்தாலும் ஒரே ஒரு மீனாட்சி தான். அது ரக்ஷிதாவாக தான் இருந்தார்.

இவர் இந்த சீரியலுக்காக சிறந்த நடிகைக்கான விருது வாங்கியபோது மகிழ்ச்சியில் மேடையில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். அந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.

புடவை, ஹை ஹீல்ஸ் போட்டுட்டு எப்படி இப்படி பண்ண முடியுது?? ஜோதிகாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான DD – வீடியோ உள்ளே.!

இந்த நிலையில் தற்போது இவர் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் லெக்கின்ஸ் அணிந்து அதன் மீது புடவை கட்டி கொண்டு சென்றுள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டுள்ளார்.

அந்தப் புகைப்படம் தற்போது திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் ஹாட், சூப்பர் என கூறி வந்தாலும் ஒரு சிலர் இதனை விமர்சிக்கவும் செய்துள்ளனர்.

இது புடவையா இல்ல வேற எதுனாவா?? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல் ஹாலிவுட் ஹீரோயினு நெனப்பு, ஓவர் சீன் என ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.