Vijay Tv Pugazh New Car

விஜய் டிவி புகழ் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு உதவியாக தொகுப்பாளர் மாகாபா இருந்துள்ளார்.

Vijay Tv Pugazh New Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்தவர் புகழ்.

இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள டான் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

புதிய கார் வாங்கிய புகழ்.. கூடவே இருந்து உதவிய விஜய் டிவி தொகுப்பாளர் - தீயாக பரவும் புகைப்படம்.!!

தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்று அடுத்த நிலைக்கு முன்னேறி வரும் புகழ் தற்போது புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

அவர் கார் வாங்குவதற்கு விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா பேருதவியாக இருந்தார். தான் வாங்கிய புதிய காரில் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் புகழ்.