Vijay Tv Pugazh About Master

மாஸ்டர் படத்தில் நடித்தால் கூட இந்த ரீச் கிடைக்காது என விஜயின் பல வாய்ப்பை நிராகரித்துள்ளார் விஜய் டிவி பிரபலம் ஒருவர்.

Vijay Tv Pugazh About Master : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லி வேடத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

மேலும் மாளவிகா மோகணன் நாயகியாக நடித்துள்ளார் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்கு விஜய் டிவி பிரபலமான புகழ்க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆனால் அவர் அப்போது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பிசியாக இருந்ததால் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். எனக்கு பெரிய ரீச் கொடுத்தது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான். மாஸ்டர் படத்தில் நடித்திருந்தால் கூட இந்த அளவிற்கு ரீச் கிடைத்து இருக்குமா என்பது சந்தேகம் தான்.

இரண்டு வாய்ப்பும் ஒரே நேரத்தில் வந்ததால் மாஸ்டர் படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அடுத்த முறை விஜய் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.