Vijay Tv Tweet About BB4
Vijay Tv Tweet About BB4

விஜய் டிவி தொகுப்பாளினி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் 4ல் நீங்களும் பங்கேற்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Vijay Tv Priyanka Video About Bigg Boss4 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் 3 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. 3 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து விரைவில் நான்காவது சீசன் நடைபெற உள்ளது.

அக்டோபர் நான்காம் தேதி முதல் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து இதுவரை இரண்டு ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

90

போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொன்னபடி கேளு என்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் சீசன் நான்கில் நீங்களும் பங்கேற்கிறீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.