Vijay TV Mahabharatham Krishna's Real Life Style
Vijay TV Mahabharatham Krishna's Real Life Style

மகாபாரத கிருஷ்ணர் யார்? அவருடைய லைப் ஸ்டைல், ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் பற்றி பார்க்கலாம் வாங்க.

Vijay TV Mahabharatham Krishna’s Real Life Style : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் மகாபாரதம். அச்சு அசலாக அப்படியே நம்முடைய மனதை கொள்ளை கொண்டுள்ள சீரியல்‌.

உண்மையில் மகாபாரதப் போர் நம் கண்முன் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நம்மால் உணர முடியும் அளவிற்கு தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த சீரியல்.

இந்த சீரியலில் கிருஷ்ணராக நடித்துள்ளவர் சௌரப் ராஜ் ஜெயின். மாடலிங் துறையை சார்ந்த நடிகர். டெல்லியில் பிறந்தவர். தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பையில் வசித்து வருகிறார்.

டெல்லியில் உள்ள CSKM PUBLIC SCHOOL என்ற பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துள்ளார். குரு கோபிந்த் சிங் இந்திரபிரசாதா யூனிவர்சிட்டியில் BCA படிப்பை முடித்துள்ளார்.

அப்பாவைப் போலவே சைலன்ட் அண்ட் ஸ்மார்ட் – இணையத்தில் வைரலாகும் விஜய் மகனின் குரூப் போட்டோ!

அதன் பின்னர் புனேவில் உள்ள சிம்பயோசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் MBA படிப்பை முடித்துள்ளார்.

கர்மா என்ற ஆங்கில படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஓம் நமோ வெங்கடேசாயா என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு ரிமிக்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகி உள்ளார்.

மகாபாரத தொடரில் கிருஷ்ணாவாகவும் மகாகாளி சீரியலில் சிவனாகவும் நடித்துள்ளார். விஷ்ணுவாகவும் பிரபல சீரியல் ஒன்றில் நடித்துள்ளார்.

இவரின் அம்மாவின் பெயர் ராஜ் ஜெயின். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு உடன் பிறந்த இரண்டு சகோதரிகள் உள்ளனர் ‌.

புத்தகங்களைப் படிப்பது, நடனமாடுவது, நீச்சல் அடிப்பது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்றவை இவரின் பொழுதுபோக்குகள்.

ரித்திமா சுரப் ஜெயின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2017 ஆம் ஆண்டு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவானார்.

இவரின் ஃபேவரைட் நடிகர் அமீர்கான், அக்ஷய் குமார், ரித்திக் ரோஷன். பேவரைட் நடிகை மாதுரி தீட்சித், சுஷ்மிதா சென்.

ஃபேவரைட் திரைப்படம் 3 இடியட்ஸ். பேவரிட் டைரக்டர் ராஜமவுலி, அனுராக் பாசு, பேவரைட் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

ஃபேவரைட் எழுத்தாளர் குல்சார், ஜாவ்டு அக்டார். ஃபேவரைட் புத்தகம் : The Secret by Rhonda Byre.

பேவரைட் கிரிக்கெட்டர் சச்சின் டெண்டுல்கர். ஃபேவரிட் இடம் : லண்டன்

விட்டதைப் பிடிக்க போகும் சூர்யா.. அதிரடியான கூட்டணியில் ஹிட் அடிக்கப் போகும் அடுத்த படங்கள் – முழு விவரத்துடன் இதோ!

கிளாஸ்ரோபோபியா ( Claustrophobia) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளனனவர். அதாவது ஒரு சிறிய இடம் அல்லது ஒரு அறையில் இருக்க பயம்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஆக நடித்து வரும் ஷாகிர் ஷெயிக்கின் நெருங்கிய நண்பர். பிடித்தமான கார் ஃபோர்டு ஃஇகோபோஸ்ட்.

சீரியலில் ஒரு எபிசோடுக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.