Vijay TV Helps to FEFSI Staff
Vijay TV Helps to FEFSI Staff

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பலரும் தவித்து வரும் நிலையில் விஜய் டிவியும் தன் பங்கிற்கு உதவியை செய்துள்ளது.

Vijay TV Helps to FEFSI Staff : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் இந்தியா முழுவதும் லாக் டவுனில் இருந்து வருகிறது.

இதனால் பல குடும்பங்கள் வேலையில்லாமல் அன்றாட உணவிற்கே அல்லல்பட்டு வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற நிதியை அளித்து உதவி வருகின்றனர்.

சூப்பர் ஹிட் இயக்குனருடன் தல அஜித், இணையத்தில் வைரலாகும் இதுவரை பார்த்திராத புகைப்படம்.!

அந்த வகையில் விஜய் டிவியும் தங்களது தொலைக்காட்சி சேனலில் பணிபுரியும் பெப்ஸி ஊழியர்களுக்கு தற்போது வேலை இல்லை என்றாலும் அவர்களுக்கான சம்பளத்தை கொடுத்துள்ளது.

பெப்சி உறுப்பினர்கள் பலரும் விஜய் டிவிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.