பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் தொகுப்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது விஜய் டிவி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றி கரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
ஆனால் திடீரென்று கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வு பெறுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.இது பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இன்று பிக் பாஸ் தொகுப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகும் என்ற அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டு இருந்தது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகிறார் என்பதை வீடியோவுடன் அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.