Vijay TV Explain On Bigg Boss 4
Vijay TV Explain On Bigg Boss 4

பிக் பாஸ் நான்காவது சீசன் எப்போது துவங்கும் என்பது பற்றி விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.

Vijay TV Explain On Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

வீடியோ சீன் முதல் சீசன் எதிர்பாராத அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களும் கோலாகலமாக சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து முடிந்தன.

இதன் நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் டிவி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

கன்னடன் ரஜினியும் கிறிஸ்டின் விஜய்யும் என் இமேஜை கெடுக்க பார்க்கிறார்கள்? – மீரா மிதுன் சர்ச்சை பதிவு, விளாசி எடுக்கும் ரசிகர்கள்!

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி செட் அமைப்பதற்கு குறைந்தது 300 தொழிலாளர்களாவது தேவைப்படும். இதனால் தற்போதைக்கு இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்ய இரண்டு மாதங்கள் தேவை. இதனால் சென்னையில் இயல்பு நிலை திரும்பிய பின்னர் தான் இந்த நிகழ்ச்சி குறித்து பேச முடியும் என கூறியுள்ளது.

இதன் காரணமாக இந்த வருடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பிக்பாஸ் ரசிகர்களை கொஞ்சம் அப்செட்டாகி உள்ளது.