பிரம்மாண்டமான வீட்டைக் கட்டி குடியேறியுள்ளார் விஜய் டிவி தீனா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடி செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீனா. இவரது தொலைபேசி அழைப்புகளுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தற்போது ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தளபதி விஜயுடன் சேர்ந்து மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.

இந்த நிலையில் தீனா தன்னுடைய சொந்த ஊரில் ஒரு பெரிய வீட்டைக் கட்டி பால் காய்ச்சி குடும்பத்துடன் குடியேறி உள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு சொந்த ஊரில் கனவு வீடு என பதிவு செய்துள்ளார். தீனாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

https://www.instagram.com/p/Cp1vIMOStQ4/?igshid=YmMyMTA2M2Y=