Vijay TV Controversy : #RedLightChannelVijayTV Trending in Twitter | Bigg Boss | Bigg BOss Tamil 3 | Kamal Haasan | Kavin | Losliya | Sherin | Tharshan
கமலுக்கும் விஜய் டிவிக்கும் பெரிய அளவில் அசிங்கம் ஏற்படுத்தும் விதமாக ட்ரெண்டிங்கில் #RedLightChannelVijayTV என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Vijay TV Controversy : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் நேற்று கமல்ஹாசன் கவினை அழைத்து பேசிய போது நேரடியாக லாஸ்லியாவிடம் கவின் பேசியவை, அதனை நான் ஒன்னும் அப்பா இல்ல என கமல்ஹாசன் கூறியது போன்றவை பலருக்கும் எரிச்சலை தான் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கவினுக்காக போடப்பட்ட குறும்படத்தில் சாக்ஷி அகர்வாலுடன் அவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார், அப்படி இருந்தவருக்கு எப்படி சில நாடககளிலேயே இன்னொருவர் மீது காதல் ஏற்படும்? இது எல்லாம் எப்படி உண்மையான காதலாக இருக்கும்? இதை வேறு பெருமையாக படம் போட்டு காட்டுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இதனால் மக்கள் #RedLightChannelVijayTV என்ற ஹேஸ்டேக் மூலமாக எதிர்ப்புகளை தெரியப்படுத்தி வர இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

இது போன்ற எதிர்ப்புகள் கமல்ஹாசனின் அரசியல் பயணத்திற்கும் தடைக்கல்லாக அமையும் எனவும் கூறி வருகின்றனர்.

தர்ஷன் இன்று வெளியேற்றப்பட இருப்பதால் அதையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.