பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு விஜய் டிவி கறார் கண்டிஷன் ஒன்றை விடுத்துள்ளது.

Vijay Tv Condition to BB5 : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிவடைந்துள்ளன. விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கும் எனவும் அதனை உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என்பது போல தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் சீசன் 5.. போட்டியாளர்களுக்கு விஜய் டிவி போட்ட கறார் கண்டிஷன்.!!

இந்த நிகழ்ச்சிக்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த முறை போட்டியாளர்களாக பங்கேற்பாளர்களுக்கு விஜய் டிவி கறார் கண்டிஷன் ஒன்றை விதித்துள்ளது.

அதாவது போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக கொரானா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5-ல் குக் வித் கோமாளி புகழ் அல்லது பவித்ரா பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.