பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகின்றன.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் எட்டாவது சீசன் தொடங்க உள்ளது.
ஆனால் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த சலசலப்பு இன்னும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பாரதி கண்ணம்மா புகழ் அருண் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொள்வார் என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே சொல்கின்றனர். குறிப்பாக இவரும் கடந்த சீசனின் வெற்றியாளரான vj அர்ச்சனாவும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்த தீபக் கலந்து கொள்ளப் போவதாகவும் தகவல் கசிந்து உள்ளது. இது மட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோயாவும், அவரது காதலர் ttf வாசனும் ஜோடியாக கலந்து கொள்வார்கள் என்றும் பேசப்படுகிறது.
இது எந்த அளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.