ஈஸ்வரி எடுத்த முடிவால் பாக்கியா செக் வைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஈஸ்வரி இனி கோபி இந்த வீட்டில் தான் இருப்பான் என முடிவெடுத்த நிலையில் பாக்யா அப்படினா நான் என்ன பண்ணனும் என்பதை நீங்களே சொல்லுங்க என கேட்க ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

அவருக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லாம ஆயிடுச்சி அப்படி இருக்கும் போது அவர் இந்த வீட்டில் தான் இருப்பார் என்றால் நான் வெளியே போகட்டுமா என கேட்க நீ எதுக்கு வெளியே போகணும் என எல்லோரும் பாக்யாவை கேட்க ஈஸ்வரியும் ஆமா நீ எதுக்கு வெளியே போகணும்? அவனும் இந்த வீட்டில் இருக்கட்டும், நீயும் இந்த வீட்டிலேயே இரு என சொல்கிறார். அது எப்படி அத்தை முடியும் என பாக்யா கேட்க உங்க முடிவு இதுதான் என்றால் நான் எனக்கான முடிவை எடுத்துக்கலாமா என கேட்க என மிரட்டுரியா என்று ஈஸ்வரி கேள்வி கேட்க பாக்யா சத்தியமா இல்லை என சொல்கிறார்.

மேலும் அப்படி என்றால் நான் வெளியே போறேன் என சொல்ல எழில் நீ எதுக்கு நான் வெளியே போகணும் அவர் தான் போகணும் என சப்போர்ட் செய்ய ஜெனியும் பாக்யாவுக்கு ஆதரவாக பேச ஈஸ்வரி கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா, யாரும் எங்கேயும் போக வேண்டாம் என சொல்கிறார். அதே சமயம் கோபி இந்த வீட்டில் தான் இருப்பார் என சொல்ல எழில் சரி வாமா நம்ப வீட்டை விட்டு கிளம்பலாம் என சொல்லிக் கூப்பிட ராமமூர்த்தி தடுத்து நிறுத்தி கோபி இந்த வீட்ல இருக்கேன்னு சொன்னானா அவன் போதை தெளிஞ்சு எழுந்ததும் பொண்டாட்டியை தேடி பூனை மாதிரி போய்கிட்டே இருப்பான் என சொல்லி நிற்க வைக்கிறார்.

அடுத்ததாக கோபி குடிபோதை தெளிந்து எழுந்துக்கொள்ள தனது வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். மறுபக்கம் ராதிகா கோபி இன்னமும் வரல அவ்வளவுதான் என்னுடைய வாழ்க்கை என சொல்ல அவருடைய அம்மா அவர் அங்க தான் இருப்பார் நீயும் அங்க தான் இருக்கணும் கிளம்பி போ மயூவை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி ஏற்றி விடுகிறார்.

தூக்கத்திலிருந்து எழுந்த கோபி ஃபோனை எடுத்து பார்க்க ராதிகா 108 மிஸ்டுகால் கொடுத்திருக்க ஷாக் ஆகிறார். இன்னைக்கு உனக்கு சங்கு தான் இந்த வீட்ல வேற தங்கி இருக்க, இனி என்ன நடக்க போகுதோ என கோபி புலம்ப அப்போது இனியா உள்ளே வந்து நீங்க இங்கேயே இருங்க டாடி என்று சொல்ல அது எப்படி முடியும் என கோபி கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது நீங்க இங்கேயே இருங்க என சொல்கிறார்.

அதற்கு அடுத்ததாக கோபி ஏழுதி வெளியே வர ஈஸ்வரி அவரைக் கூப்பிட்டு உட்கார வைத்து அம்மா சொல்றது கேட்பதானே என சொல்லி நீ இனி இந்த வீட்டிலேயே இருந்தது என்று சொல்கிறார். இதைக் கேட்ட கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.