Bigg Boss Tamil 4 Contestants Update :
Bigg Boss Tamil 4 Contestants Update :

பிக் பாஸ் சீசன் 4 பற்றி ரசிகர்களுக்கு டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளது விஜய் டிவி.

Vijay Tv About Bigg Boss 4 : தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நிகழ்ச்சியின் ஒன்றாக இருந்து வருவது பிக் பாஸ். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

அக்டோபர் மாதம் முதல் நான்காவது சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வேலைகளில் நிகழ்ச்சி குழு விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.

தூக்கி வீசப்பட்ட இலக்கியா.. அவருக்கு பதிலாக பிக்பாஸ் வீட்டுக்கு என்ட்ரி கொடுக்கும் கவர்ச்சி நடிகை – வெளியான அதிரடி அப்டேட், யார் அவர் தெரியுமா??

உலகம் முழுவதும் உள்ள பிக்பாஸ் ரசிகர்கள் இந்நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற விவாதக் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவி ரசிகர்களுக்கு டாஸ்க் ஒன்றைக் கொடுத்துள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் யார் என்பதை சும்மா சொல்லுங்க. சரியா மேட்ச் ஆகுதா? இல்லையா? என பார்க்கலாம் என கூறியுள்ளது.

Major Changes in Bigg Boss Telugu 4
Major Changes in Bigg Boss Telugu 4

இதுகுறித்த ப்ரோமோ வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர்கள் யார் யாரை எதிர்பார்க்கிறார்கள் என்பது பற்றிய கருத்துக்களை கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

பெரும்பாலான ரசிகர்கள் ஷிவானி நாராயணன், ஷாலு ஷம்மு, லட்சுமி மேனன் ஆகியோரின் பெயர்களை பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இவர்கள் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களாக பங்கேற்க இருக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.