தளபதி 67 திரைப்படத்தின் பூஜை வீடியோவில் விஜய் & திரிஷா இணைந்திருக்கும் காட்சிகளின் வீடியோ ரசிகர்களால் எடிட் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், சாண்டி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை சமீபத்தில் தெரியப்படுத்திய படக்குழு இப்படத்தின் பூஜை வீடியோவையும் நேற்று வெளியிட்டுள்ளது. அதிக லைக்குகளை குவித்து இணையதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் விஜய் மற்றும் திரிஷா இணைந்திருக்கும் காட்சிகளை மட்டும் இணைத்து ரசிகர்களால் எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

https://twitter.com/k_veni_/status/1621009286561411072?t=6aT0Ecoz2_4vfiw6O4YBpQ&s=19