Vijay then 2021 is for Rajini | Rajinikanth | Thalapathy Vijay | Kollywood | Tamil cinema | Cinema News | Lok Sabha Eelctions 2019 | Eelctions Results 2019

Vijay then 2021 is for Rajini :

ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண், ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் தளபதி வரவில்லை என்றால் 2021-ல் தளபதிதான் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழகம் மட்டும்தான் மூன்று முதலமைச்சர்களை சினிமாவில் இருந்து பெற்றிருக்கிறது.

சினிமாவுக்கும் அரசியலுக்குமான தொடர்பு இங்கு அவ்வளவு வலிமையானது. திரையில் நீதிக்காக போராடுபர்கள் அரியணையில் அமர்ந்தாலும் அதையே செய்வார்கள் என்ற பிம்பம் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பரவி இருப்பதை எவராலும் மறுக்க முடியாது.

Hereafter No VAALI & No KUSHI in My Life – Exclusive Interview With S J Surya

எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதாவில் தொடங்கி விஜயகாந்த் வரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு போய் தாக்கம் ஏற்படுத்தியவர்களின் பட்டியல் ஏராளம்.

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் வருவாரா மாட்டாரா? என எதிர்பார்க்க வைத்த ரஜினியும் ஒருவழியாக வந்துவிட்டார். கமலோ அவருக்கு ஒருபடி மேலே போய், கட்சி கொடியையே அறிமுகம் செய்துவிட்டார்.

இந்த நிலையில் அடுத்து இவரும் வருவார் என ரசிகர்களின் பார்வை தற்போது ஒருவர் மீது திரும்பி இருக்கிறது.. அவர் ‘விஜய்’.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில் அதை குறிவைத்து ரோகினி திரையரங்க உரிமையாளர் ரேவந்த் சரண், ஒரு டிவீட் செய்துள்ளார்.

அதில் தளபதி வரவில்லை என்றால் 2021-ல் ரஜினிதான் என அவர் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.