bigil

பிகில் படத்திற்கு விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்ட சிலை ஒன்று சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன் என அனைத்திலும் விஜய் பட்டய கிளப்பி இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், பிகில் படத்தின் விஜய் கெட்டப்பை சில ஆர்வகோளாறுள்ள ரசிகர்கள் சிலையாய் வடித்துள்ளனர். ஆனால், அது விஜய் மாதிரி இல்லாமல் விஜய் டிவி தாடி பாலாஜி போல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.