Vijay Statement to IT Officier
பிகில் திரைப்படத்திற்காக தான் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது பற்றி விஜய் கொடுத்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது.

Vijay Statement About Bigil Salary  : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வீட்டில் நேற்று முதல் வருமான வரித்துறையின் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

AGS என்டர்டைன்மெண்ட், பைனான்சியர் அன்பு செழியன் வீடு உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வந்தவர்.

இந்நிலையில் விசாரணையில் தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்காக ரூ 30 கோடி தான் சம்பளமாக பெற்றேன் என வருமான துறை அதிகாரிகளுடன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தளபதி விஜயை தொடர்ந்து அவரது மனைவி சங்கீதாவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் 80 கோடி, 100 கோடி சம்பளம் வாங்கினார் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர் ரூ 30 கோடி தான் சம்பளம் வாங்கினேன் என வாக்கு மூலம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijay IT Raid Press Release

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.