Vijay Sri Tweet

Vijay Sri Tweet : முதலில் என்னை கைது பண்ணுங்க அதன் பிறகு விஜய் சேதுபதியை கைது பண்ணுங்க என சூப்பர் டீலக்ஸ் பட சர்ச்சைக்கு தாதா 87 இயக்குனர் ஆவேசமாக ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஷாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தாதா 87. இந்த படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தவர் விஜய் ஸ்ரீ.

தாதா 87 படத்தில் ஒரு நடிகை திருநங்கையாக நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்திருந்தார். காரணம் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட திருநங்கையை இழிவாக காட்டும் காட்சிகள் இடம் பெறவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன், சமந்தா பஹத் ஃபாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருந்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த படத்தில் திருநங்கைகளை இழிவாக சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தால் விஜய் சேதுபதியை கைது செய்ய வேண்டும் என திருநங்கைகளின் அமைப்பு கூறி வருகிறது.

இந்த சர்ச்சைக்கு தாதா 87 இயக்குனர் கோபமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டீவீட்டில் நானும் தான் திருநங்கையை வைத்து படம் எடுத்தேன். என்னையும் கைது செய்யுங்க என ட்வீட் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க உங்க படத்துல அவங்கள மரியாதையாக தான் நடித்தி இருந்தீர்கள். உங்கள் மீது எங்களுக்கு நல்ல அபிப்பிராயம் உள்ளது என கூறி வருகின்றனர்.

மேலும் ஒருவர் தவறான படங்களும் உங்களது படத்தை நீங்களே ஒப்பிட்டு ஏன் மரியாதையை குறைத்து கொள்கிறீர்கள் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.