Vijay Sri next Pupji
Vijay Sri next Pupji

Vijay Sri next Pupji – தமிழ் சினிமாவில் தாதா 87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ.

உலக நாயகன் கமல்ஹாசனின் சத்யா படத்தை அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தை அடுத்து இவர் அடுத்தடுத்த கதைகளை உருவாக்கி வருகிறார்.

ஏற்கனவே தாதா 87 படத்தை தொடர்ந்து சென்னை மாநகரத்தின் மாமன்னனாக பீட்ருவின் வாழ்க்கை வரலாற்று படமாக இப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை உறுதி செய்யும் விதமாக சில போஸ்டர்களும் இணையத்தில் வெளியாகியிருந்தது.

இந்த படத்தின் நாயனாக ஹம்சவரதன் என்கிற ஹம்சன் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து விஜய் ஸ்ரீ மேலும் ஒரு கதையை உருவாக்கியுள்ளார்.

அந்த கதைக்கு பப்-ஜி என பெயர் வைத்து அதனை தயாரிப்பாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளாராம். இந்த படத்தை பற்றிய அறிவிப்பும் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தாதா 87 படத்தின் மூலம் கிடைத்த புகழால் விஜய் ஜி தொடர்ந்து அடுத்தடுத்த படங்களும் கோலிவுட்டில் வலம் வர தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.