Vijay Sri in PubG Movie

Vijay Sri in PubG Movie : சினிமாவில் நடிகர்களின் வாரிசுகளுக்கோ அல்லது அவர்களின் உறவினர்களுக்கோ வாய்ப்புகள் எளிதாக கிடைத்து விடும்.

அப்படி கிடைத்த வாய்ப்பு சரியாக பயனளிக்க அதிர்ஷ்டம் என்ற ஒன்றும் திறமை என்ற ஒன்றும் கூடவே பயணித்தால் மட்டுமே வெற்றி என்ற இலக்கை அடைய முடியும்.

அப்படியாக, தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்க அறிமுக நாயகனாக 2018ல் களமிறமிறங்கியிருக்கிறார் நாயகன் அர்ஜுமன்..

பிரபல இயக்குனரால் கைவிடப்பட்ட விக்ரம் மருமகனுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி!!

தமிழ் சினிமாவின் தலை சிறந்த நடிகர் விக்ரமின் சகோதரி அனிதாவின் மகன் தான் இந்த அர்ஜுமன்…

தொடர்ந்து 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் இமயம், ஏதோ ஒரு காரணத்தைக் கூறி படத்தை கைவிட, பிறகு, பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற படத்தில் அர்ஜுமனை நாயகனாக களம் இறக்கினார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி.

வீட்டில் முடங்கி இருக்கும் நடிகர்களுக்கும், பல முன்னனி நடிகர்களால் கைவிடப்பட்ட துணை நடிகர்களுக்கும் தொடர்ந்து வாய்பளித்து வரும் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி, அர்ஜுமனுக்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளார்.

இந்த படத்தின் மூலமாகவே அர்ஜுமன், நாயகனாக தமிழ் சினிமாவில் அடையாளம் காட்டப்படவிருக்கிறார்.

பிரபல இயக்குனரால் கைவிடப்பட்ட விக்ரம் மருமகனுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி!!

பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ள நிலையில், போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகிறதாம்…

விரைவில் இசையும் , படத்தின் டீசர் வெளியிடப்படும் எனவும், இது தமிழ் சினிமாவில் யாரும் தொடாத ஒரு கதை எனவும் இயக்குனர் தரப்பு கூறி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.படத்தை ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கிறது