Vijay Sri G Tweet About Ajith : Inside the Official Tweet.! | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema News
தல அஜித்திற்கே விருது இல்லையா? என கொந்தளிப்புடன் ட்வீட் செய்துள்ளார் தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

Vijay Sri G Tweet About Ajith : பெரும்பாலும் விழாக்களில் கலந்து கொள்ளாதவர் நடிகர் அஜித் குமார். ஆனால் முக்கியமான நிகழ்வுகளின் போது முதல் ஆளாக வந்து அமர்ந்திருப்பார். அவர் இல்லாத மேடைகளிலும் அவரை புகழ்ந்து பேசும் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் தான் அதிகம் எனலாம் .

சமீபத்தில் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தனது ட்விட்டர் பதிவில் ” நடிகர் அஜித்குமார் போன்ற ஒரு சிலருக்கு சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டதாக நான் கேள்வி படவில்லை.

அடுத்தடுத்த கதைகளுடன் அதிரடியாக களமிறங்கும் தாதா 87 இயக்குனர் விஜய் ஸ்ரீ!

அவர்கள் பொது விழாக்களுக்கு வருவதில்லை என்பதால் தான் விருதுகள் வழங்கப்படவில்லையோ? விருதுகள் விற்கப்படுவதை தடுக்கவேண்டும்.

கூட்டம் கூடி பணத்துக்காக விருது வழங்கும் விழா நடத்துவது தொடர்கிறது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் . இயக்குனரின் இந்த ட்விட் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது .

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.