Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கோரிக்கை வைத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.

தமிழ் சினிமாவில் தாதா 67 என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ ஜி. தாதா 87 படத்தில் ஒரு நடிகையை திருநங்கையாக நடிக்க வைத்திருந்தார். அந்த நடிகையும் திருநங்கையாகவே வாழ்ந்திருந்தார்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது திருநங்கை வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை என குறிப்பிட்டு இருந்தார்.

இதனையடுத்து தாதா 87 பட இயக்குனர் விஜய் ஸ்ரீ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் திருநங்கையாக நடிக்க வேண்டும் என ரஜினி சார் சொன்னதை பார்த்தேன், என்னுடைய முதல் படத்தில் நாயகியை திருநங்கையாக நடிக்க வைத்திருப்பேன். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகைகள் பயந்தனர். பலர் மறுத்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவ்வாறு கூறியதற்கு நன்றி. ரஜினியின் இந்த பேச்சு வருங்காலத்தில் புதிய இயக்குனர்களை உருவாக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தர்பார் பட வேளைகளில் இருக்கும் இந்த நேரத்தில் எனக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் தாதா 87 படத்தை காண்பிக்க தயாராக இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை ரஜினிக்கும் விஜய் ஸ்ரீ கதை ரெடி பண்ணிட்டாரோ..?

Vijay-Sri-G

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.