Vijay Speech in Bigil Audio Launch | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Bigil Audio Release Function | Atlee
பிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்ன பேசினார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

Vijay Speech in Bigil Audio Launch : தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தது விஜயின் பேச்சை தான்.

தளபதி என்ன பேச போகிறார்? என்ன பன்ச் கொடுக்க போகிறார் என்பதையெல்லாம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தளபதியும் பேச தொடங்கி விட்டார்.

வாங்க என்ன பேசினார் என பார்க்கலாம்

உலகத்துலயே உழைச்சவனை மேடையில் ஏத்தி அழகு பார்க்குற முதலாளி ரசிகன் தான்! வேற லெவல் யா நீங்க,

பெண்கள் ஜெயிக்கற படத்தில வாழ்க்கையில ஜெயிச்ச நயன்தாரா இருக்கறது ரொம்ப சந்தோஷம்

பல லட்ச மரக்கன்று நடும் விவேக் அவர்களுக்கு நன்றி & பாராட்டுகள்

சுட சுட ஆவி பறக்குங்க அது இட்லியா இருந்தாலும் சரி.. அட்லியா இருந்தாலும் சரி.. உருவம் தான் சிறிசு… உயரம் பெருசு.

சைலண்டாக டைட்டில் வெல்ல போவது இவர் தான் – பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

படத்தில் நடித்த அனைத்து கால்பந்து வீராங்கனை பெயர்களை மேடையில் வாழ்த்தி பேசினார் தளபதி.

லைப் கூட கால்பந்து மாதிரிதாங்க கோல் போட முயற்சி செய்வோம்… தடுக்க ஒரு கூட்டமே வரும்… சில சமயம் சேம் சைட் கோல் போடுவான் நம்மாளே.

வாழ்கைல அவங்க மாதிரி இவங்க மாதிரி வரணும்னு ஆசை படாதீங்க அதுக்கு தான் அவங்களே இருக்காங்களே.. நீங்க நீங்களா வாங்க.

தனித்தன்மையோட சாதிக்கனும் அதுதான் சாதனை.

பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்.!

இது போன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க – தளபதி விஜய்

Social Media எல்லை மீறாமல் நடந்துகொள்ள அறிவுறுத்தல்!

ரசிகர்களை பார்த்து வேற லெவல் நீங்க உங்க எனர்ஜி வேற லெவல்

நன்றி நண்பா நன்றி நண்பி. என் நெஞ்சில் குடியிருக்கும். வெறித்தனம் பாடல் ஆரம்பித்ததும் ரசிகர் தொடர் விசில் சத்தம். ரியல் மாஸ்

பேனர் கட் அவுட்லாம் கிழிச்சப்போ ரசிகர் வறுத்தப்பட்ட அளவு நானும் வறுத்தப்பட்டேன்.. என் போட்டோ கிழிங்க உடைங்க என் ரசிகன் மேல கை வைக்காதீங்க எவன எங்க உக்கார வைக்கனுமோ அவன அங்க உக்கார வைங்க எல்லாம் சரியாக மாறிடும்.

#Nesamani Trend ப்ரண்ட்ஸ் படத்தில் நடிக்கும் போது சூர்யா சிரிப்பை அடக்கிவிட்டார் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை “ஆணியே புடுங்கவேண்டாம்” – பழைய நினைவுகள் வந்தது…#PrayforNesaman Trend பன்னதுக்கு நன்றி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.