Vijay Special : விஜய் ரசிகர்களுக்கு இன்னும் இரு தினங்களில் மெகா கொண்டாட்டம் காத்து கொண்டுள்ளது, இது குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று கில்லி. விஜய், திரிஷா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த இந்த படத்தை தரணி இயக்கி இருந்தார்.
இப்படம் ரிலீசாகி 15 வருடங்கள் நிறைவடைய உள்ளன. இதனை கொண்டாடும் விதமாக பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் வரும் ஞாயிற்று கிழமை மாலை 3 மணிக்கு கில்லி படத்தை ஒளிபரப்ப உள்ளனர்.
இந்த அறிவிப்பை பார்த்த விஜய் ரசிகர்கள் செம உற்சாகமடைந்துள்ளனர். விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தளபதி 63 தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் வைட்டிங் என பதிவிட்டுள்ளார்.
Celebrate 15 years of the mega-blockbuster #Ghilli with us this Sunday at 3 pm. pic.twitter.com/kxT5yqBQgi
— Sun TV (@SunTV) March 28, 2019
Waiting ???????? https://t.co/rxqnK4ot3G
— Archana Kalpathi (@archanakalpathi) March 28, 2019