விஜயின் பீஸ்ட் படத்தில் வரும் அரபிக் குத்து பாடலின் புதிய சாதனை குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடித்த வெளியான திரைப்படம் தான் “பீஸ்ட்”. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.

இதில் இடம் பெற்று இருக்கும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இருந்த நிலையில் இப்படத்தில் வரும் “அரபிக் குத்து” என்ற சிவகார்த்திகேயன் எழுதியிருந்த பாடல் மட்டும் தற்போது யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

இப்பாடலை அனிருத்தும், ஜோனிடா காந்தியும் பாடியிருந்தனர். இந்தப் பாடலுக்கான நடனத்தை ஜானி மாஸ்டர் உருவாக்கியிருந்தார். பாடல் யூ-டியூப் தளத்தில் வெளியான உடனேயே லட்சக்கணக்கான முறை பார்த்து ரசிக்கப்பட்டது. இன்று வரை தொடர்ந்து பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

அதனால் ரசிகர்களின் ஃபேவரிட் ஆக இருக்கும் இந்த அரபிக் குத்து பாடல் youtube தளத்தில் 20 கோடிக்கும் அதிகமான முறை பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டரில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.