Vijay Son Returned to India
Vijay Son Returned to India

தளபதி விஜய் வீட்டில் அனைவரும் செம ஹாப்பியா ஆக இருந்து வருவதாக குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay Son Returned to India : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த நிலையில் பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக தள்ளிப்போய் வருகிறது.

மேலும் விஜய் மகன் சஞ்சய் கனடாவில் இருந்து இந்தியாவிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சூப்பரான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்த சஞ்சய் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

தளபதியே இதுக்கு ட்ரெய்னிங் எடுக்கணும்.. வாத்தி கம்மிங் பாட்டுக்கு Eye Brow டான்ஸ் ஆடிய முன்னணி நடிகர் – இணையத்தை கலக்கும் வீடியோ!

தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பிறகு அவர் வீடு திரும்பியுள்ளார். இதனால் தளபதி விஜய் தன்னுடைய மகனைப் பார்த்த சந்தோஷத்தில் உற்சாகம் அடைந்துள்ளார்.

சஞ்சயின் வருகையால் தளபதி விஜயின் வீடு களைக்கட்டி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இந்தியா வந்த சங்கை அடுத்ததாக தன்னுடைய முதல் படத்தில் நடிப்பார் எனவும் கூறப்பட்டு வருகிறது. அந்த படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.