Siva & Vijay Combo

Vijay & Siva Combo :

முதல் முறையாக விஜயுடன் இயக்குனர் சிவா இணைய உள்ளார். அதற்கான வேலைகள் நடந்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது இது குறித்து அஜித் விசாரித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கி விட்டார் சிறுத்தை சிவா.

விஸ்வாசம் படத்தை அடுத்து தளபதி விஜயை வைத்து படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். விஜயும் கதை கேட்டு பிடித்து போகவே இணைந்து பணியாற்றலாம் என கூறியுள்ளார்.

இது குறித்து சிறுத்தை சிவா அஜித்துடனும் விவாதித்துள்ளார். இதனையடுத்து அஜித் சமீபத்தில் சிவாவை சந்தித்த போது தளபதி படம் என்னாச்சு என விசாரித்துள்ளார்.

அதற்கு சிவா தற்போது விஸ்வாசம் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் போயிட்டு இருக்கே.. இதெல்லாம் முடிந்ததும் அந்த படத்தின் வேலைகள் தொடங்கும் என கூறியுள்ளார்.

இதில் அஜித் விஜய் படத்தை பற்றி விசாரித்தது கூட ஆச்சரியமில்லை. ஆனால் தளபதி படம் என குறிப்பிட்டுள்ளார். அஜித் இவ்வாறு கேட்டது தளபதி ரசிகர்களுக்கே கொஞ்சம் இன்ப அதிர்ச்சி தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.