Vijay Shankar New Movie | Vijay Shankar Combo | Thalapathy Vijay Shankar Movie | Vijay Vikram Movie | Hrithik Roshan
Vijay Shankar New Movie

Vijay Shankar New Movie :

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் 1996-ம் ஆண்டு வெளிவந்து வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் இந்தியன்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது.

லைக்கா தயாரிப்பில் சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கிய பாடில்லை.

மேக்கப் சரியில்லை, பைனான்ஸ் கிடைக்கவில்லை என பல காரணங்கள் சொல்லப்பட்டது.

நண்பனுக்கு கோயில் கட்டு பாட்டில் விஜய் – லாரன்ஸ் டிவீட்டை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

இந்நிலையில் இப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தனது அடுத்த படத்திற்கான வேலையை ஷங்கர் தொடங்கிவிட்டார் என நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இது பாய்ஸ் பாணியில் புதுமுகங்கள் நடிக்கும் படம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இடையில் ஷங்கருக்கு விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்துள்ளதாம்.

தனக்காக முதல்வன் பாணியில் ஒரு சூப்பரான கதையை தயார் செய்ய விஜய் கேட்டுள்ளாராம். அதன்படி ஷங்கரின் அடுத்த படம் விஜய் படமாகவே இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

shankar and vijay :

மேலும் இப்படத்தில் விக்ரமும் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்த ரோலில் விக்ரமுக்கு பதிலாக ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னமும் ஓயாத விஸ்வாசம் அலை – இப்ப என்ன தெரியுமா?

மேலும் இது இந்தியாவிலேயே காஸ்ட்லி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.