Vijay Shankar as captain
Vijay Shankar as captain

இந்தியாவில் நடக்கும் முதல் தர கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி. நடப்பு சாம்பியனாக விதர்பா அணி உள்ளது. இதன் 86வது சீசன் வரும் 9ம் தேதி துவங்குகிறது. இதில் தமிழகம், குஜராத், மும்பை உள்ளிட்ட 38 அணிகள் பங்கேற்கின்றன.

‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி முதலிரண்டு போட்டிகளில் முறையே கர்நாடகா (டிச. 9-12, திண்டுக்கல்), இமாச்சலப்பிரதேசம் (டிச. 17-20) அணிகளை எதிர்கொள்கிறது. இரண்டு போட்டிகளுக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் விவரம் : விஜய் சங்கர் (கேப்டன்), பாபா அபராஜித், முரளி விஜய், அபினவ் முகுந்த், தினேஷ் கார்த்திக், ஜெகதீசன், அஷ்வின், சாய் கிஷோர், நடராஜன், விக்னேஷ், அபிஷேக், முருகன் அஷ்வின், சித்தார்த், ஷாருக் கான், கே. முகுந்த், வாஷிங்டன் சுந்தர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here