Vijay Shankar and Shikhar Dhawan : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Vijay Shankar and Shikhar Dhawan :

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்றது.

இதில் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா அரையிறுதியோடு வெளியேறியது. இந்திய அணியில் தவான், விஜய் சங்கர் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

தொடர் நடந்து கொண்டிருக்கும்போது இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்தியா வெஸ்ட் இண்டீஸ் சென்று விளையாடுகிறது. இதற்கான அணி நாளை அறிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து உலக கோப்பை தொடரில் தங்களுக்கு ஏற்பட்ட காயம், அதற்கான சிகிச்சை முறை குறித்த அறிக்கையை இருவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சமர்பித்துள்ளனர். இருவருடைய அறிக்கை மீதும் திருப்தி ஏற்பட்டால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வீரர்கள் தேர்வில் பரிசீலிக்கப் படுவார்கள்.

இதற்கிடையில் டி. என். பி. எல். தொடர் நேற்று தொடங்கியது. தமிழக வீரர் விஜய் சங்கர் காலில் பெரு விரல் காயம் காரணமாக பங்கேற்பதில் சந்தேகம் உள்ளது.

மேலும் அவர் முழு உடல் தகுதி பெற்றாலும் மே. தீ. உடனான போட்டியில் தேர்வு செய்யபட்டால் அவரால் டி. என். பி. எல் தொடரில் கலந்து கொள்ள முடியாது.

2) மூத்த வீராங்கனை விருது – பி.டி. உஷா :

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான திகழ்ந்தவர் பி.டி. உஷா. இவர் தடகள ராணி என அழைக்கப்படுபவர்.

55 வயதாகும் இவர், கடந்த 1985-ம் ஆண்டு ஜகர்த்தா நகரில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 400 மீட்டர் தடையோட்டம் மற்றும் 4 x 400 மீட்டர் தொடரோட்டம் ஆகிய பிரிவுகளில் தங்க பதக்கம் வென்றார். இது தவிர வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்.

இணையத்தில் இன்கேம் இன்கேம் பாடல் படைத்த புதிய பிரம்மாண்ட சாதனை – என்ன தெரியுமா?

கத்தார் நாட்டின் தோஹா நகரில் வருகிற செப்டம்பர் 24-ந்தேதி சர்வதேச தடகள கூட்டமைப்பின் (ஐ.ஏ.ஏ.எப்.) 52-வது தொடக்க கூட்டம் நடைபெறுகிறது.

இதில் விருது வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கும். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி உஷாவுக்கு அந்த அமைப்பின் சி.இ.ஓ. ஜோன் ரிட்ஜியன் அழைப்பு விடுத்துள்ளார்.

சிறந்த பணியாற்றியமைக்காக ஐ.ஏ.ஏ.எப்.பின் மூத்த வீராங்கனை விருதுக்கு உங்களது பெயர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது என தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் என தெரிவித்து உள்ளார். இந்த கவுரவத்திற்கு டுவிட்டரில் பி.டி. உஷா நன்றி தெரிவித்து கொண்டார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.