
Vijay Sethupathi Video :
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விஜய் வசனத்தை பேசி அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி. அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் கலக்கி வருகிறது.
தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக பலருக்கும் பிடித்த நடிகனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பாலாஜி தரணி தரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சீதக்காதி படம் வரும் டிசம்பர் 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதி சன் டிவியில் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கி வரும் ஹலோ சகோ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது விஜய் சேதுபதியிடம் ஸ்ருதிஹாசன் நீங்களே உங்கள பத்தி ஒரு கிசுகிசு கிரியேட் பண்ணனும்னா என்ன பண்ணுவீங்க என கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு விஜய் சேதுபதி ஐ அம் எ கார்ப்பரேட் கிரிமினல் என்ற டைலாக்கை கூறியுள்ளார். ஆனால் இது இந்த கேள்விக்கான பதில் அல்ல வேறு ஏதோ ஒரு கேள்விக்கான பதிலாக தான் இது இருக்கும். என்ன என்பதை நிகழ்ச்சியை பார்த்தால் தான் தெரிய வரும்.
