Ajith and Vijay Sethupathi
அஜித் படத்தில் நடிக்க நான் ரெடி, அதுவும் எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இமேஜ் பார்க்காமல் அறிமுக நடிகர்களின் படங்களில் கூட கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.

பேட்டயில் ரஜினியை எதிர்த்ததை தொடர்ந்து தற்போது மாஸ்டரில் விஜயை எதிர்க்கிறார். இந்நிலையில் தற்போது அஜித்துடன் எப்போது நடிப்பீர்களா என விருது விழா ஒன்றில் கேட்டுள்ளனர்.

அதற்கு விஜய் சேதுபதி அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் போதும், எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடி என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் விரைவில் அஜித்துடன் இணைந்து நடித்து விடுவார் விஜய் சேதுபதி.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.